Breaking News

பைஸர் முஸ்தபா பதவியை இராஜினாமா செய்தார்

சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

 பைஸர் முத்தப்பா, வழக்கறிஞரான தனது தொழிலில் போதிய கவனம் செலுத்தும் பொருட்டு இந்த அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு தான் முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.