Breaking News

மகிந்தவின் குற்றங்களை கண்டு கொள்ளாத ரணில் -லால் காந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் இடம் பெற்ற ஊழல் தொடர்பாக, ஐக்கிய தேசிய கட்சி தேடாமல் இருப்பது சந்தேகத்த ஏற்படுத்துவதாக ஜே.வி.பியின் மாகாண சபை உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார்.


இந்த நடவடிக்கையானது, மகிந்தவை மீண்டும் பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி விரும்புதாக தெரிகின்றது.ரணில் விக்ரமசிங்க உட்பட குழுவினர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நான் நினைப்பது ஒன்றும் தவறில்லை.ஏன் என்றால் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிரிந்தால் நல்லது என நினைக்கின்றார்கள் என்று தான் தோன்றுகின்றது.

அதன் பின்னர் மகிந்தவை அழைத்து வந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கைவிடபட்டவர்களுடன் ஒன்றினையலாம் என ரணில் விகரமசிங்க நினைத்திருப்பார்.மகிந்தவை மீண்டும் கொண்டுவருவதற்கான அவசியம் ஐ.தே.கவிற்கு இருக்குமென்றால் மகிந்த தொடர்பாக குற்றங்களை ஐ.தே.கவினர் முன்னோக்கி கொண்டு செல்ல மாட்டார்கள்.

இதனால் தான் மகிந்தவின் குற்றங்களை குறித்து ஐ.தே.க கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றது என லால் காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.