யாழ்.இளைஞன் புலனாய்வுப் பிரிவினரால் கைது
கட்டாரில் இருந்து இலங்கை வந்த யாழ்.இளைஞன் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான கியு.ஆர். 660 ரக விமானத்தின் மூலம் டோஹா கட்டார் ஊடாக இத்தாலிக்குச் செல்லும் நோக்கில் இலங்கையில் புறப்பட்டிருந்தார்.எனினும் குறித்த நபர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இத்தாலிக்குச் செல்ல முற்பட்டதாக தெரிவித்து கட்டார் அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நாடு திரும்பிய குறித்த நபரை ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.இத்தாலியிலுள்ள நண்பர் ஒருவரால் குறித்த யாழ்ப்பாண இளைஞனுக்கு 6 மாத கால வீசா வழங்கப்பட்டுள்ளாகவும், இதற்காக போலி ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள நபரை நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதேவேளை கடந்த வாரத்தில் இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.