Breaking News

அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடினர் -மெத்தியூஸ்

தென்ஆபிரிக்க அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் நாங்கள் துரதிஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவிய போதும் அனைத்து வீரர்களும் சிறப்பாக வெளிப்படுத்தி னார்கள்என இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தியூஸ் சமூக வலைத்தளமான டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் அடுத்த போட்டிகளில் இளம் வீரர்கள் மேலும் பிரகாசிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.நேற்று நடைபெற்ற பேட்டியில் அனுபவவீரரான டில்ஷான் சதத்தை பெற்றுக் கொண்டதுடன் பந்து வீச்சிலும் அனுபவ சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மட்டுமே அதிக பட்சமான விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதே போன்று சங்கக்கார அணித்தலைவர் மெத்தியூஸ் ஆகியோரும் தமது அனுபவத் திறமையை வெளிப்படுத்தினர்.