சிறைகைதிகள் பலர் விடுதலை செய்யப்படவுள்ளனர்
கடந்த கால யுத்தத்தின் போது, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 275 பேரில் சிறிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக, மீளமைப்பு தொடர்பான விஷேட ஜனாதிபதி செயற்பாட்டு அணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, கடந்த அரசாங்கத்தின் போது, இணைத்து கொள்ளப்பட்ட பட்டத்தாரிகள் உள்விவகார அமைச்சின் கீழ் இணைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.