வடமராட்சி கிழக்கில் சிங்கள மீனவருக்கு அனுமதி! தமிழ் மீனவர்கள் சர்ச்சையில்
வடமராட்சி கிழக்கில் மீன்பிடி தொழில் செய்வதற்கு தென்னிலங்கை மீனவர் ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களிற்கு அனுமதி வழங்குவதில்லையென சமாசத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி இந்த வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள மீனவர் ஒருவருக்கு ஆழியவளை கடற்றொழில் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரின் பெயரில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆழியவளை சமாசத்தலைவர் மற்றும் செயலாளரின் தன்னிச்சையான முடிவுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுபற்றி வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கத்தலைவர் நா.நாகேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தின் பொதுச்சபையுடன் கலந்தாலோசிக்காமல் தலைவர், செயலாளரின் தன்னிச்சையான முடிவால் இந்த ஆனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தன்னுடைய பெயரிலேயே இந்த ஆவணத்தை தலைவர் வழங்கியுள்ளார். இப்படியான அனுமதிகள் மூலம் சட்டவிரோத மீன்பிடிக்கான சாத்தியம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.