அன்ரன் பாலசிங்கத்தை தரக் குறைவாக பேசிய கிழக்கு முதல்வர் (காணொளி இணைப்பு)
பதவி ஏற்று மணித்தியாலங்கள் கடப்பதற்குள் விடுதலைப் புலிகளின் ஆலோசனர் அன்ரன் பாலசிங்கத்தை தரக் குறைவாக பேசியதுடன் “அன்ரன் பாலசிங்கம் ஏதோ பெரிய ஆள் மாதிரி அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்” என ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அவமதித்ததாக கிழக்கின் புதிய முதலமைச்சரின் ஆரம்ப கட்ட நடவடிக்கை அமைந்துள்ளதாக தமிழ் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
தனி அலகு தொடர்பாக வன்னி மண்ணிற்கு எத்தனை முறை முஸ்லீம் தலைமை சென்று அங்கு புலிகளின் தலைவர் மற்றும் ஆலோசகர் அன்னர் பாலசிங்கத்தை ஏன் சந்தித்தார் இவ் விடயம் புதிய முதல்வருக்கு தெரியாதா என கிழக்கின் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
முஸ்லீம்களுக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழ் தலைமைகள் மற்றும் பல விடயங்களை கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் இன்று சந்தர்ப்பவாத அரசியல் செய்த அப்பாவிப் பொது மக்களை விற்று பதவிகளை அனுபவிக்கும் இவர் கிழக்கு தமிழரை காப்பாரா அல்லது அழிப்பாரா ஆரம்ப கருத்துக்கள் ஆபத்தாக உள்ளதாக தமிழ் மக்கள் அச்சம் கொண்டள்ளனர்.