தாய்வானில் விமான விபத்து! பலர் பலி(படங்கள் ,காணொளி இணைப்பு)
தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 53 பயணிகளுடன் தலைநகர் தைபேயில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துள்ளானது.
இதுவரை விமானத்தில் பயணம் செய்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைபேயில் உள்ள சோங்சான் விமான நிலையத்தில் இருந்து கின்மென் விமான நிலையத்துக்கு 53 பயணிகளுடன் விமானம் இன்று புறப்பட்டது.
இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பாலம் ஒன்றின் மோதி கீலங் என்ற ஆற்றில் விழுந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை விமானத்தில் பயணம் செய்தவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சிலர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 53 பயணிகளுடன் 5 பணியாளர்களும் இந்த விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.