அறிக்கை தாமதமாகுமா? நாளை அவசரமாக கூடுகிறது பேரவை!
இலங்கைப்படைகள் புரிந்த போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா அறிக்கையை ஒத்திவைக்க வேண்டுமென இலங்கை தொடர்ச்சியாக கோரிவரும் நிலையில், இந்த விடயத்தை ஆராய்ந்து இறுதி முடிவை எடுப்பதற்காக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நாளை திங்கட்கிழமை அவசரமாக ஜெனிவாவில் ஒன்று கூடுகிறது.
மனிதஉரிமைகள் பேரவையின் தலைவர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.