Breaking News

வடக்கில் திட்டமிட்ட இராணுவக்குவிப்பே! குற்றம் சாட்டுகிறது கூட்டமைப்பு

இரண்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழும் தென் பகுதியில் வெறும் முப்பதாயிரம் இராணுவத்தினரை நிலை நிறுத்தியுள்ள அரசு வடக்கில் வேண்டுமென்றே ஒன்றரை லட்சம் இராணுவத்தினரை குவித்து வைத்துள்ளது. 

இந்த நடவடிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன். தெரிவித்தார்.

 யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்: 

ஒரு சில நாள்களுக்கு முன்னர் வடக்கு கிழக்குக்கு பயணம் மேற்கோண்ட பாதுகாப்பு இராஜங்க அமைச்சர், இராணுவ முகாம்களை பார்வையிட்டதுடன், இராணுவ முகாம்களை ஆகாயத்திலோ அன்றி கடலிலோ வைத்திருக்க முடியாது. ஆகவே இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என்று தெரிவித்துச் சென்றார். வட மாகாணத்தில் உள்ள இராணுவத்தினர் அனைவரையும் ஒன்பது மாகாணங்களுக்கும் பகிர்ந்து நிறுத்தப்படுவதன் மூலம், தமிழ் மக்களை மீள குடியேற அனுமதிக்க முடியும் என்பதை நாம் புதிய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சந்திரிகா அம்மையாருக்கும் தெரிவித்துள்ளோம்.

 மீள் குடியேற்றம் என்பது உடனடியாக செய்யப்பட வேண்டும் வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்துவாழும் மக்கள் அனைவரும் உடனடியாக குடியேற்றப்பட வேண்டியது அவசியமாகும். 58 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை இராணுவத்தினர் கையகப்படுத்திவைத்துள்ளனர். இவற்றில்,காங்கேசன்துறை துறைமுகப் பகுதி மற்றும் விமானப்படைத்தளம் என்பன அமைந்த பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளை உடனடியாக விடுக்கப்பட வேண்டும்.இதனை செய்வதற்க்கு பல காலம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

இதேபோல சம்பூரிலும் சுமார் ஆயிரத்தி இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏக்கர் காணியை கையகப்படுத்தியுள்ளனர். இந்தக் காணிகள் மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியின் உறவினருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய காணிகளை உடனடியாக விடுவித்து மக்களை உரிய முறையில் குடியேற அனுமதிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம்.- என்றார். இதேவேளை, வடக்குமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட திர்மானத்தை வரவேற்றுள்ள அவர், இனப் படுகொலையென்பது வெறுமனே ஒரு இனத்தை கொன்றொழிப்பது மட்டும் அல்ல. ஓர் இனத்தை வாழ முடியாமலும் இருக்க இடமில்லாமல் செய்வதும், அவர்களுடைய கலை பண்பாட்டு கலாசாரங்களை அழிப்பதும் ஒரு வகையில் இனப் படுகொலைதான்