Breaking News

நெடுங்கேணி வைத்தியசாலையில் சிங்கள வைத்தியர்! நோயாளிகள் சிரமம்

நெடுங்கேணி வைத்தியசாலையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள வைத்தியர் சிங்களவர் என்பதால் நோயாளிகள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 

வைத்தியரிற்கு தமிழில் ஒரு வார்த்தையும் தெரியாமல் உள்ளதால், தமது பிரச்சனைகளை அவருக்கு புரிய வைக்க முடியாமல் நோயாளிகள் சிரமப்படுவதை அவதானிக்க முடிகிறது. பலரும் சைகை பாணியிலேயே தமது நோய்களை சொல்கிறார்கள். அதனால் தவறான சிகிச்சையளிக்கப்படக்கூடிய ஆபத்துக்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அபாயத்தை தவிர்க்கும் விதத்தில் உடனடியாக தமிழ்பேசத் தெரிந்த வைத்தியர் ஒருவரை அங்கு பணிக்கமர்த்துமாறு பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.