நீங்கள் துணிந்து முடிவெடுத்தால் மக்கள் பின்னே வருவார்கள் !(காணொளி)
தீர்மானமும் மெய்ந்நிலையும் அரசியலும் ஒரு நோக்கு புத்தக வெளியீட்டு விழா நேற்று கிளிநொச்சி கூட்டுறவு கல்லூரி மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புக்கிளையின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் அவர்கள் உரையாற்றும்போதே எதிர்காலத்தில் தமிழ்த் தலைமைகள் துணிச்சலுடன் முடிவெடித்து செயற்படவேண்டும் என்றும் அதனை எவ்வாறு செய்வது என்பது தொடர்பிலும் அரைமணிநேர உரையினை நிகழ்த்தியிருந்தார் அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஆசியுரைகளை நல்லை ஆதீனமுதல்வர் அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரபரமாச்சாரிய சுவாமிகள் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை ஆகியோர் வழங்கினர். விருந்தினர்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பா.உறுப்பினரமான மாவை.சேனாதிராசா ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல்மாகாணசபையின் உறுப்பினருமான மனோகணேசன் கிழக்கு மாகாண எதிர்கட்சி முதல்வர் சி.தண்டாயுதபாணி இலங்கை தமிழரசு கட்சியின் பொதுசெயலாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான துரைராசசிங்கம் வன்னி பா.உறுப்பினர் வினோநோகராதலிங்கம் யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சரவணபவன் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜெனிவா தீர்மானமும் மெய்ந்நிலையும் அரசியலும் ஒரு நோக்கு நூலின் வெளியீட்டுரையை மட்டக்களப்பு மாவட்ட பா.உறுப்பினர் ப.அரியநேந்திரன் ஆற்ற ஆய்வுரைளை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன் ஆகியோர் நிகழ்த்தினர்.பதிலுரையை பா.உறுப்பினரும் நூலின் தொகுப்பாசிரியருமான சி.சிறீதரன் வழங்க நன்றியுரையை இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவரும் சட்டக்கல்லூரி மாணவனுமான சுரேன் வழங்கினார்.
இந்த நூலின் முதற்பிரதிகளை முதற்கரும்புலி கப்டன் மில்லரின் தாயார், மாவீரர் கப்டன் பாணணின் பெற்றோர்கள், திருதிருமதி. ஆனந்தராசா, முள்ளிவாய்க்காலில் தன் தந்தையை இராணுவத்திடம் ஒப்படைத்தும் அகதிமுகாமில் நோயினால் தாயாரையும் இழந்தவருமான மதிவாணன் (நிலான்) தூயவன், ஊராட்சி நகராட்சி பேருராட்சி மன்றங்களின் சார்பாக சாவகச்சேரி ஊராட்சி மன்றத்தின் தவிசாளர் துரைராசா, மாகாண சபைகள் அரசியல் பிரமுகர்கள் சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன் ஆகியோர் அதிவணக்கத்துக்குரிய ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.