என்னை அறிந்தால் படத்தை பாராட்டிய சென்ஸார் கமிட்டி
இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளனர்.அதாவது, இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் மிகவும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. படம் வந்த பிறகு அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இதுமாதிரியான ஒரு அப்பா வேண்டும் என ஏங்குவார்கள் என்று கூறியுள்ளனர்.
இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். அனுஷ்கா, திரிஷா, அருண்விஜய், விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.