Breaking News

பிரதமர் ரணிலுக்கு எதிராக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முறைப்பாடு

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு சவால் ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் நேற்று முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

சிங்களயே தேசிய முன்னணியின் தலைவர் வணக்கத்திற்குரிய மெடில்லே பக்ஞாலோக்க தேரரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மெடில்லே பக்ஞாலோக்க தேரர்,

வடக்கிற்கு செல்ல முன்னர் விதிக்கப்பட்டிருந்த பாஸ் நடைமுறை நீக்கப்பட்டமை, இராணுவம் வசப்படுத்திய காணிகள் மீண்டும் தமிழர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை போன்ற விடயங்கள் தேசிய பாதுகாப்புக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதுமட்டுமன்றி, கொழும்பில் அதியுயர் பாதுகாப்ப வலயம் நீக்கப்பட்டமை, இந்தியாவில் அகதிகளாக உள்ள ஈழத்தமிழர்களை தாயகத்திற்கு அழைக்கின்றமை, புரொண்ட்லைன் சஞ்சிகை மீதான தடையை நீக்கியமை போன்ற விடயங்கள் தேசிய பாதுகாப்புக்கு சவாலை ஏற்படுத்துகின்றன.

இதனை செய்யத்துணிந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இதற்கு முழுப்பொறுப்பு எனதி் தெரிவித்தே இந்த முறைப்பாட்டை பதிவு செய்ததாக மெடில்லே பக்ஞாலோக்க தேரர், கூறினார்.