கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சு பதவிகளைப் பெறுகிறது கூட்டமைப்பு!
இரண்டு அமைச்சுப் பதவிகள் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, கிழக்கு மாகாண அமைச்சரவையில் இணைந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கடந்த வாரம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி கிழக்குடி மாகாண அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு அமைச்சர் பதவிகளையும், பிரதி தவிசாளர் பதவியையும் பெற்றுக் கொள்ளவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கம் ஆகியோர் அமைச்சர் பதவிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மாகாணசபை உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா பிரதி தவிசாளர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்மொழியப்பட்டுள்ளார்.