Breaking News

யாழ்.பல்கலைக்கழகம் நடாத்தும் போராட்டத்திற்கு த.தே.ம.முன்னணி ஆதரவு

இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை 6 மாத காலத்திற்குப் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  அறிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீற்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக  அமைக்கபட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடவிருந்த நிலையில் குறித்த அறிக்கை வெளியிடப்படுவது 6 மாதங்களுக்குப் பிற்போட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

மேற்படி அறிக்கையை வெளியிடுவதனை பிற்போடும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை கண்டித்தும்  எவ்வித காலதாமதமும் இன்றி அந்த அறிக்கையை உரிய நேரத்திற்கு வெளியிட வேண்டுமென வலியுறுத்தியும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் நாளைய தினம் நடாத்தவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் முழுமையான ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேற்படி போராட்டத்தில் கட்சி உறுப்பினா்கள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு தமிழ் மக்களது உள்ளக் கிடக்கையை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.