கிழக்கு மாகாண ஆட்சிக்கு த.தே.கூ ஒத்துழைக்க வேண்டும் - ஹக்கீம்
கிழக்கு மாகாணசபையை பிரதிநிதித்துவம் செய்யும் புதிய நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுக்கும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள அக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி கிழக்கு முதலமைச்சராக தமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் பதவி வகிக்க ஒப்புதல் அளித்தமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவர் தனது நன்றியை இதன்போது தெரிவித்தார்.