Breaking News

பதவியை கைவிடவோ, விலகவோ இல்லை - மொஹான் பீரிஸ்

தாம் எந்தவொரு தருணத்திலும் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து விலகவோ, கைவிடவோ இல்லை என மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவி;க்கப்பட்டுள்ளது.தமது பதவிக்கும், காரியாலய செயற்பாடுகளுக்கும் தொடர்ந்தும் வெளியாரின் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, தாம் அந்த நெருக்கடிகளில் இருந்து விலகியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.