காணாமல் போனோரை மீட்டுத்தரக் கோரி யாழில் போராட்டம் (படங்கள் இணைப்பு)
காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? உலகே உனக்கு கண்ணில்லையா?ஐ.நா விசாரணையை உரிய திகதியில் நடத்து, ,புதிய அரசே! காணாமல் போன உறவுகளை மீட்டுத்தா? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
மேலும் தமிழ்த்தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், காணாமற் போன உறவுகளின் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.