யாழ்.உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாது - ஜோன் அமரதுங்க
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றப்போவதில்லை என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
வடக்கே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றப்போவதில்லை அவ்வாறு அகற்றினால் நாங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இந்த உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவத குறித்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் இது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு யாழ் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.
கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியமற்றதாகவும் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தில்லை. உயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மக்கள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லும் போது பல சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அத்துடன் மேலதிக பாதுகாப்பு அவசியமில்லை என ஜனாதிபதியே தெரிவித்துள்ளார் எனவும், வீதி தடைகளை திறக்குமாறு ஜனாதிபதி கேட்டுகொண்டுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி அதிகாலை சதி முயற்சியில் ஈடுப்பட்டமைக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விசாரணைக்குட்படுத்த முடியாது .எனினும் அதன்போது முன்னாள் பிரதம நீதியரசர் அங்கு பிரசன்னமாகியிருந்தமை குறித்து விசாரணை நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.