இலங்கையின் விசாரணை அறிக்கையை பிற்போடப்பட்டதை நியாயப்படுத்தும் ஐ.நா
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்காமல் பிற்போடப்பட்டதை நியாயப்படுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவை மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளது.
இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை ஆறு மாதங்களுக்குப் பிற்போடுவதற்கு எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக பி.ரி.ஐ செய்தி நிறுவனத்திடம் கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் புதிய தலைவர் ஜோகிம் ருக்கர் இது மிகவும் அறிவார்ந்த முடிவு என்று தெரிவித்துள்ளார்.
2014இல் நிகழ்ந்த காசா மோதல்கள் தொடர்பான விசாரணைக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து வில்லியம் சபாஸ் விலகியதும், இலங்கை தொடர்பான அறிக்கை பிற்போடப்பட்டதும் ஒப்பீட்டளவில் தனிப்பட்ட விடயங்கள். இவை தொடர்பான பொதுவான ஒரு முடிவுக்கு வருவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.