Breaking News

புதிய அரசு தமிழ் மக்களின் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்தவில்லை - கூட்டமைப்பு

புதிய அரசு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


 இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர் இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தேர்தலுக்குப் பின் இலங்கையின் நிலைமை, புதிய அரசின் 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. 

 100 நாள் வேலைத் திட்டத்தில் பல நல்ல விடயங்கள் செயற்படுத்தப்பட்டுள்ள போதும் வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க கூடிய கவனம் செலுத்தப்படவில்லை. மீள்குடியேற்றம் உள்ளிட்ட வடகிழக்கு மக்களின் அரசியல் தீர்வுக்கு உரிய ஆவணங்களை புதிய அரசிடம் சமர்பித்துள்ள போதும் அரசு அதுகுறித்து விரைந்து செயற்படவில்லை.

 புதிய அரசு ஏற்படுத்த தமிழ் மக்கள் பாரிய நியாயமான பங்களிப்பு செய்துள்ள போதும் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்வு குறித்து அரசாங்கம் விரைந்து கவனம் செலுத்தவில்லை தாம் சுட்டிக்காட்டினோம். தமது கோரிக்கைகள் சரி என்று ஏற்றுக் கொண்ட பிஸ்வால் அரசிற்கு இது தொடர்பில் வலியுறுத்துவதாக உறுதி அளித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.