புதிய அரசுக்கு எதிராக சிங்கள பௌத்த அமைப்புக்கள் அணிதிரள்வு!
அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட சிங்கள பௌத்த அமைப்புக்கள் அணி திரள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிஹல ராவய உள்ளிட்ட இருபது சிங்கள பௌத்த அமைப்புக்கள் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன.
புதிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளன. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய இணைந்து செயற்பட போவதாக சிங்கள பௌத்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதியை மாற்றுவதற்காகவே மக்கள் வாக்களித்தனர் எனவும், பிரதமரை மாற்றுவதற்காக அல்ல எனவும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.இந்த இருபது சிங்கள பௌத்த அமைப்புக்களும் எதிர்வரும் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.