Breaking News

மீனவர் பேச்சுவார்த்தையை பிற்போட முயற்சி

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை பிற்போடுமாறு கோரப்பட்டுள்ளது.

இலங்கை மீன்பிடித்துறை ராஜாங்க அமைச்சர் டிலிப் வெதஆராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி சென்னையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது.

தமிழக மீனவர்களின் இழுவை படகுகளே இலங்கை மீனவர்களுக்கு பிரச்சினையாக காணப்படுகிறது.இந்த நிலையில் இது குறித்து இந்திய அரசாங்கம் முன்வைத்த மாற்றுத் திட்டம் குறித்து இன்னும் ஆராயப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பேச்சுவார்த்தைய பிற்போடுவதற்கு கோரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.