Breaking News

பொதுத் தேர்தலில் மகிந்தவுக்கு இரத்தினபுரி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச, இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன தேர்தல் தொகுதியில் இருந்தே போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஐக்கிய மக்கள் முன்னணியின் “சக்கரம்’ சின்னத்திலேயே மகிந்த இம்முறை களமிறங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்‌ச ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்தே போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.