Breaking News

வெலிக்கடை சிறையில் மஹிந்த

சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவை பார்வையிடவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெலிக்கடை சிறைக்குச் சென்றிருந்தார்.

அங்கு திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் சிறையில் உள்ள கடற்படை வீரர் ஒருவரையும் சந்தித்து நலம் விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸ அத்தநாயக்கவை பார்வையிட்டு மஹிந்த ராஜபக்ஷ வெளியில் வந்தபோது ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். 

13ம் திகதி இடம்பெறும் கட்சி கூட்டத்திற்கு வருகை தருவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அது குறித்து தனக்கு தெரியாது என்றும் இன்று காலைதான் ஊரில் இருந்து வந்ததாகவும் கூறியதோடு அது என்ன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டமா என பதில் கேள்வி எழுப்பியபோது விமல் வீரவன்ச குழுவின் கூட்டம் என கூடியிருந்த ஊடகவியலாளர்கள் பதில் அளித்தனர்.