புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரசேச சபைத் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதிவரை நடத்தகூடாது என்று நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த பிரதேச சபைகளுக்கான தேர்தல் நாளை நடைபெற ஏற்பாடாகியிருந்தது. எனினும் வாக்காளர் இடாப்பு பிரச்சினை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.