இலங்கை ஜனாதிபதி புதுடெல்லியை சென்றடைந்தார் (படங்கள் இணைப்பு)
நான்கு நாள் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனா இன்று புதுடெல்லி சென்றடைந்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லி விமான நிலையத்தில் அவரை நேரில் வரவேற்றார்.இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாளை காலை இந்திய ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பளிக்கப்படவுள்ளார்
.
.
இந்த வரவேற்பு நிகழ்வில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி அமித் அன்சாரி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள், தொழில் வர்த்தக உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும், இந்தியாவிலுள்ள ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.