நாட்டை விட்டு வெளியேற கே.பிக்குத் தடை
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசத் தொடர்பாளரும் ஆயுத விநியோகஸ்தருமான குமரன் பத்மநாதன் இலங்கையை விட்டு வெளியேற மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கே.பியை கைது செய்ய உத்தரவிடுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் நவாஸ் மற்றும் விஜித்மலகொட முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.