Breaking News

நியமிக்கப்பட்ட குழு வெலிக்கடை மோதல் குறித்த விசாரணைகளை ஆரம்பித்தது

வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு நிகழ்ந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய குழு இன்று சம்பவம் நடந்த இடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். 

இந்த குழுவிற்கு ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விமல் நம்புவசம் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக விஜயதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி எஸ்.கே. லியனகே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் வெலிக்கடை சிறை வளாகத்தில் பரிசோதனைகளை நடத்திய போது, சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் சந்தரரத்ன பல்லேகம உடன் இருந்தார். 

2012 ஆம் ஆண்டு நம்பவர் மாதம் 9ஆம் திகதி நடந்த வெலிக்கடை மோதல் சம்பவத்தில் சுமார் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பல காவலர்கள் மற்றும் அதிரடிப் படையினர் இந்த மோதலில் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.