Breaking News

'கோட்டா முகாம்' விவகாரம் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்துக்கு வருகிறது

திருகோணமலையிலுள்ள 'கோத்தா' தடுப்புமுகாம் பற்றிய
தகவல் உட்பட வடக்கு, கிழக்கில் காணாமற்போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டிய விடயங்களை தான் ஜனாதிபதியின் கவனத்துக்கு உடன் கொண்டுவருவார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சாட்சிகள் பாதுகாப்புத் தொடர்பிலான சட்டவரைபு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

"வடக்கு, கிழக்கில் காணாமற்போனோர் தொடர்பிலும் கோட்டா முகாம் பற்றியும் சுரேஷ் எம்.பி. குறிப்பிட்டிருந்தார். இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் விடயங்களாகும். எனவே  அது பற்றித்தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருவேன்" என்றும் அவர் கூறினார். அதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பிலும் மீள் விசாரணை ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.