தென்னாபிரிக்க அணிக்கு எச்சரிக்கை
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஒவ்வொரு அணிகளும் உலககிண்ண போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நோக்கி புறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணிகளுக்கும் தாய் நாட்டில் இருந்து புறப்படும் போது ரசிகர்களும் விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பிவைப்பது வழமையான ஒன்று. மாறாக உலகக்கிண்ண போட்டியில் கலந்து கொள்வதற்காக அண்மையில் அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட டி. வில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி உலக கிண்ண போட்டியில் தோல்வியுடன் திரும்பக்கூடாது என்று அந்த நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் பிகிலே மலுலா எச்சரித்து வழியனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வீரர்களுக்கு தெரிவிக்கையில், ரோபோக்களுக்கு எதிராக நீங்கள் விளையாடவில்லை. மனிதர்களுடன் தான் ஆடுகிறீர்கள். எந்த அணியையும் சாதாரணமாக கருதிவிடக்கூடாது. பொறுப்புடன் விளையாடினால் தான் வெற்றிபெறமுடியும் என்பதனால் உலக கிண்ண போட்டியில் தோல்விகளை சந்தித்து நாடு திரும்பக்கூடாது.
என எச்சரித்து அனுப்பியுள்ளார். இந்த எச்சரிக்கையானது உலகின் தலை சிறந்த அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்காவுக்கு உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள ஒரு தூண்டுதலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.