மஹிந்தவின் அபிவிருத்தி திட்டங்களை நிறுத்தினார் மைத்திரி
கடந்த அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கான பதில் இன்று வழங்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல அறிவித்தார்.23/2 நிலையியல் கட்டளையின் கீழ் சபையில் எதிர்க் கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த அரசாங்கம் கிராமிய மட்டத்தில் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வீதி, மின்சார வசதித் திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.இந்த வருடம் ஆரம்பிக்கப்படவிருந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அபிவிருத்தித் திட்டங்களை இடைநிறுத்துமாறு மாவட்ட செயலாளர்களுக்கு சுற்றுநிருபம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் தொழில் இழந்துள்ளனர். இது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.