Breaking News

வடக்கிற்கு செல்லவதைத் தவிர்த்தார் அமெரிக்க தூதர்

நிஸா பிஸ்வாலின் இலங்கைக்கான பயணம் இன்றுடன் முடிவடைவதால் அவர் யாழ்ப்பாணத்துக்கு வர மாட்டார் என அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. எனினும் இன்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துப் பேசுவார் என்று தூதரகப் பேச்சாளர் கூறினார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலர் நிஸா பிஸ்வால் இலங்கை வந்தார். இவர் இலங்கைக்கு வரும்போது யாழ்ப்பாணத்துக்கும் வருவார் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது. கொழும்பில் முக்கிய பிரமுகர்களை சந்திப்பதற்கு நேரம் போதவில்லை.

 இதனாலேயே அவர் யாழ்ப்பாணத்துக்கு வரமாட்டார் என அறிவிக்கப்பட்டது. இதேவேளை நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரை சந்தித்து நிஷா பேசினார். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டது.