ஐ.நா விசாரணை! சம்பந்தனிற்கு கவலையுமில்லையாம், சந்தோசமுமில்லையாம்!
வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் வெளியிடப்படவிருந்த ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை ஆறுமாதங்கள் பிற்போடப்பட்டள்ளது.
புதிய அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மனிதஉரிமைகள் பேரவையின் ஆணையாளர் இளவரசர் அல் ஹூசைன் அறிவித்துள்ளார். இளவரசரின் இந்த அறிவிப்பு பற்றி, தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது, இந்த அறிவிப்பால் தான் கவலையோ, சந்தோசமோ அடையவில்லையாம்.
“இலங்கையின் புதிய அரசு இந்த விடயத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை நடத்துவதாக உறுதியளித்து, விசாரணை அறிக்கையை ஒத்திவைக்க கோரியிருந்தது.
இந்த ஒத்திவைப்பென்பது, இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் புதிய விடயங்களை விசாரணைக்குழுவின் முன் வைக்கவும் வாய்ப்பாகலாம். எனவே, இந்த விடயத்தில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடன் ஒத்துழைப்பது அவசியம்” என்றார்.