இலங்கை இராணுவக் கட்டமைப்பில் அதிரடி மாற்றம்
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டு, 15 மேஜர் ஜெனரல்கள் மற்றும் மூன்று பிரிகேடியர் தர அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இராணுவச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.யாழ், வன்னி, கிழக்குப் படைகளின் தலைமையக கட்டளைத் தளபதிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்
நேற்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த மாற்றங்களை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க அறிவித்துள்ளார்.தொண்டர் படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த, இராணுவத் தலைமையகத்தில், திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்குப் படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் லால் பெரேரா, இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், அவரது இடத்துக்கு, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.தொண்டர் படைகளின் தளபதியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய படைத் தலைமையகத்தின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மனோ பெரேரா, விளையாட்டுப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.வன்னிப் படைகளி தலைமையக தளபதியாக இருந்த, மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, கூட்டுப்படைத் தலைமையக பொது அதிகாரிகளின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ். படைகளின் தலைமையக தளபதியாக மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை நியமிக்கப்பட்டுள்ளார்.மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, ஆயுத தளபாடப் பிரிவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்குப் படைத் தலைமையகத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜனக வல்கம நியமிக்கப்பட்டுள்ளார்.இராணுவச் செயலராக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமனம் பெற்றுள்ளார்.
முன்னர் யாழ். படைகளின் தளபதியாக இருந்த, மேஜர் ஜெனரல் உதய பெரேரா, சபுகஸ்கந்தையில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்.படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல், ஜகத் அல்விஸ், இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வன்னிப் படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.இராணுவத் தலைமையகத்தில் அதிகாரிகளுக்கான பணிப்பாளராக மேஜர் ஜெனரல் பி.ஏ. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன், இராணுவத் தலைமையகத்தில் திட்டங்களுக்கான பணிப்பாளராக இருந்த, பிரிகேடியர் வீரசேகரவும், நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் ஜயந்த குணரத்னவும் இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பிரிகேடியர் கெப்பிட்டிவலன்ன, இராணுவத் தலைமையகத்தில் நடவடிக்கைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையே, சிறிலங்கா இராணுவத்தில் எட்டு பிரிகேடியர்களுக்கு மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர்களான எடெமா, மிகுந்துகுலசூரிய, விக்கிரமசிங்க, குலதுங்க, ஹெற்றியாராச்சி, பெரேரா, சேனாதீன, பண்டார ஆகிய எட்டு அதிகாரிகளுமே மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு