Breaking News

போர்க்குற்ற அறிக்கையினை தாமதமாக்குமாறு ஐ.நாவிடம் இலங்கை கோரிக்கை

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையினை தாமதமாக வெளியிடுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வொஷிங்டனில் புத்திஜீவிகளுடனான சந்திப்பின்போது, இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு உள்நாட்டு விசாரணைக்கான கால அவகாசம் தேவை என வலியுறுத்தியுள்ளார்.