Breaking News

மிரளவைத்த ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் அறிவிப்பு! (காணொளி இணைப்பு)

ஜோர்டான் நடத்திய வான்வழி தாக்குதலில் அமெரிக்க பெண் பிணைக்கைதி பலியாகியுள்ளதாக திட்டவட்டமாய் அறிவித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் சிறைபிடித்த ஜோர்டானிய விமானியை உயிருடன் தீயிட்டு கொழுத்தி கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல் உலகையே உலுக்கியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்டான் அரசு சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் நிலையங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் கடந்த 2013ம் ஆண்டு சிறைபிடிக்கப்பட்ட கைலா முல்லர் (Kayla Jean Mueller Age-26) என்ற அமெரிக்க சமூக ஆர்வலரும் இறந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக தீவிரவாதிகள் கூறுகையில், சிரியாவின் ரக்கா (Raqqa)நகருக்கு வெளியே கட்டிடம் ஒன்றில் கைலா முல்லர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 6ம் திகதி ஜோர்டான் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த கட்டிடம் தரை மட்டமானது என்றும் அதில் அமெரிக்க பிணைக்கைதியான கைலா முல்லர் கொல்லப்பட்டு விட்டார் எனவும் கூறியுள்ளனர்.இதனை தொடர்ந்து ஜோர்டான் நடத்திய வான்வழி தாக்குதலில் கட்டிடம் ஒன்று தரைமட்டமான காட்சி அடங்கிய வீடியோவை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் அதன் இடிபாடுகளில், கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கைலா முல்லர் காணப்படாததாகவும், அவர் கொல்லப்பட்டதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.மேலும் கைலாவின் மரணத்தை நம்பாத பெற்றோர் கூறியதாவது, கைலாவை ஒரு விருந்தினராகத்தான் நடத்துவதாக நீங்கள் எங்களிடம் கூறினீர்கள். அதனால் உங்கள் விருந்தினர் என்ற முறையில் அவர் பாதுகாப்பும், நலனும் உங்கள் பொறுப்பு என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே கைலா முல்லர் கொல்லப்பட்டு விட்டார் என்பதை தங்களால் உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.