இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிப் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணிப்பிரச்சினைகள் தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பாதுகாப்புத்துறை இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளா் சநதிப்பிலெயே இவ்வாற தொிவித்துள்ளாா்.
காலை ஒன்பது மணிக்கு விசேட உலங்குவானுர்த்தி மூலம் இரணைமடுவில் வந்திறங்கிய அமைச்சா் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்கவினால் வரவேற்கப்பட்டு, இரானுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
பின்னர் இராணுவத்தினர் மத்தியில் அமைச்சர் அவர்கள் உரையாற்றினர்.
தொடர்ந்து இரானுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள பொது மக்களின் காணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் குழு ஒன்று அமைக்கப்பட்டு இந்த காணிப்பிரச்சினைகள் தொடா்பில் ஆராயப்பட்டு வருகிறது.
எனவே விரைவில் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படும். தமிழ் மக்கள் ஜனாதிபதியின் மீது அதிக நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர் எனவே அவர்களின் நம்பிக்கைக்கு அமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் இந்த நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.