மொஹான் பீரிஸின் தீர்ப்புகள் மீது விசாரணை வேண்டும்
"மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக பதவி வகித்த காலப்பகுதியில் நாட்டின் நீதித்துறைக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அவரால் வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று உடனடியாக நியமிக்கப்படவேண்டும்'' என்று ஜே.வி.பி. நேற்று சபையில் வலியுறுத்தியது.
பிரதம நீதியரசராக இருந்த மொஹான் பீரிஸ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. மேற்படி கோரிக்கையை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பிரதம நீதியரசர் பதவியிலிருந்து மொஹான் பீரிஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டதை ஜே.வி.பி. அனுமதிக்கின்றது. காரணம், அவர் ஒரு நீதியரசர் அல்லர். கள்வராவார். மஹிந்த ஆட்சியில் நாட்டில் காட்டாட்சியும், காட்டுச் சட்டமுமே நிலவின. நீதித்துறைக்கான நியமனங்களின்போது குடும்ப ஆதிக்கம் இருந்தது. அத்துடன், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக இருந்த மத்தல திலகரத்ன தாக்கப்பட்ட சம்பவம் குறித்தோ அல்லது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷவின் வீட்டின்மீது துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பிலோ இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" - என்றார்.