பைசர் முஸ்தபா பதவியை இராஜினாமா
விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில விடயங்களை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சின் கீழ் இணைத்து வர்த்தமானியில் உள்ளடக்கியுள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் சட்டத்தரணியாக முழுநேரம் செயற்பட வேண்டும் என்பதற்காகவே அவர் அமைச்சுப் பதவியில் இருந்து விலக உத்தேசித்துள்ளதாக பைசர் முஸ்தபா கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.