Breaking News

மாவீரர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் ஆரம்பம்

மாவீரர் குடும்பங்கள்,முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத் திட்டமானது வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 வடக்கு மாகாண சபையின் வரவு -செலவுத்திட்ட அமர்வின் போது அமைச்சர் டெனீஸ்வரனால் குறித்த கொள்கைத் திட்டம் சபையில் வெளியிடப்பட்டது. அதற்கமைய நாளை முதல் சகல கிராம / மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களிடமும் படிவங்களை பெற்று சரியான தரவுகளை பூர்த்தி செய்து எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.