யாழ். மாநகர சபை கழிவுப் பொருட்களை காக்கைதீவில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று காலை மேற்கொண்டனர்.
குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதால் அந்த சுற்றுச்சூழல் முற்று முழுதாக பாதிக்கப்படுகின்றது. இதனால் பல நோய்த்தாக்கங்கள் ஏற்படுகின்றது என தெரிவித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.