Breaking News

மீண்டும் அரசியலுக்கு வருவேன்! மிரட்டுகிறார் மகிந்த

தனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் துணை நின்ற கட்சிகளுக்கு அநியாயம் இழைக்கப்பட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் சார்பாக தாம் மீண்டும் மக்களின் முன் செல்வேன் என்று எச்சரித்துள்ளார்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“மீண்டும் நான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கையும் இல்லை.
ஆனாலும்,எனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் துணை நின்ற கட்சிகளை கைவிட்டு விட முடியாது.

அவர்களைத் தனிமைப்படுத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது.நான் தலையிடாது போனால் அது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அவர்கள் அநீதியை எதிர்கொள்ள நேரிட்டால், அவர்களின் சார்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் முன் செல்வேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.