ஒரு தொடர், ஒரு கிண்ணம் ஆனால் இரண்டு ஆரம்ப விழாக்கள்
உலகக்கிண்ணத் தொடருக்காக அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண்,நியூசிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் என இரு மைதானங்களில் ஒரே நேரத்தில் ஆரம்ப விழாக்கள் நடைபெறவுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் 11ஆவது உலகக்கிண்ணத்தொடர் அவுஸ்திரேலியா,நியூசிலாந்தில் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் மொத்தமாக 49 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதற்கான ஆரம்ப விழா நாளை அவுஸ்திரேலியா,நியூசிலாந்து என இருநாடுகளிலும் இலங்கை நேரப்படி முற்பகல் 11மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.