Breaking News

யுத்தகால மனித உரிமைகள் மீறல்கள் குறித்த அறிக்கை பூர்த்தி

யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை தயாரிக்கும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.


கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு இந்த விசாரணைகளை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தியிருந்தது.விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக் குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

அறிக்கையை சமர்ப்பிக்கவும் சந்திக்கவும் நேரமொன்றை ஒதுக்கி தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பரணகம கோரிக்கை விடுத்துள்ளார். ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.