சுன்னாகம், தெல்லிப்பழை மக்களால் புதிய அமைப்பு உருவாக்கம் (படங்கள் இணைப்பு)
சுன்னாகம், தெல்லிப்பழை பகுதிகளில் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்ததால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்ட ''தூய குடி தண்ணீருக்கான பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றியம்'' என்ற புதிய அமைப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் சிவன்கோயிவில் மண்டபத்தில், வைத்தியகலாநிதி ந.சிவசங்கர் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பிரதேச மக்களைக் கொண்ட ஒரு செயலணி அமைப்பாக இந்த அமைப்பு இயங்கியது,இந்நிலையில், கழிவு எண்ணெய் பிரச்சினைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அனைத்து மக்களினதும் பங்களிப்பும் இருக்க வேண்டியதன் அத்தியாவசியத்தை வலியுறுத்தி பொது அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக வைத்தியகலாநிதி ந.சிவசங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நிவாரணம் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமைப்பின் தலைவராக க.நந்தரூபனும் செயலாளராக சி.சிவமைந்தனும் பொருளாளராக சி.தசிந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.