Breaking News

இலங்கையின் மனித உரிமைகள் மீறல்! சர்வதேச விசாரணைகள் அவசியம்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் இதற்காக ஐ.நா. விசாரணையாளர்களை நாட்டுக்குள் விசாரிக்க வேண்டும் என புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

கனேடியன் தமிழர் தேசிய பேரவை (கனடா), தமிழ் அமைப்புக்களின் டெனிஸ் கூட்டமைப்பு (டென்மார்க்), ஈழத்தமிழ் இத்தாலியப் பேரவை (இத்தாலி), நியூசிலாந்து தமிழர் பேரவை (நியூசிலாந்து), டச்சு தமிழர் கூட்டமைப்பு, மைசன் டூ தமிழீழம் பிரான்ஸ், நோர்வேஜியன் தமிழீழை பேரவை, சுவிஸ் தமிழீழ பேரவை, பெல்ஜியம் தமிழர் கலாசார பேரவை, தமிழீழ பேரவை ஜேர்மனி ஆகிய அமைப்புகளே கூட்டாக இந்தக் கோரிக்கையை விடுத்தனர். உள்ளக மட்டத்தில் நடக்கும் அனைத்து விசாரணைகளையும் தாம் புறக்கணிப்பதாகத் தெரிவித்த குறித்த அமைப்புகள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தின.