Breaking News

தந்தையை கொலை செய்தார் கோத்தா - பெண் பரபரப்புக் குற்றச்சாட்டு

கொழும்பு - பெளத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள நான்கரை ஏக்கர் காணியைக் கையகப்படுத்துவதற்காகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்­ச தனது தந்தையைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

 இந்த காணிக்காக தான் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி பொரளைச் சந்தியில் எனது தந்தை கொலை செய்யப்பட்டார். மேர்வின் சில்வா பாதாளக் குழுத் தலைவர் பிரின்ஸ் கோலம் மற்றும் கோத்தபாய ஆகியோர் இதன் பின்னணியில் உள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார். ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பினர் பெளத்தாலோக மாவத்தை இலக்கம் - 404 என்ற இடத்திற்குச் சென்றனர். 

குறித்த காணியின் உரிமையாளர் என கூறப்படும் பெண்ணுடன் சென்றிருந்தனர். காணிக்குள் செல்வதற்கு அவர்கள் முயற்சித்த போதிலும் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகதர்கள் அனுமதி வழங்கவில்லை. அந்தக் காணியில் ரஷ்யத் தூதரகம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. குறித்த காணியின் உரிமையாளர் என்று உரிமை கோரும் சி­னாஸ் பேகம் என்பவர், அந்தக் காணி தமக்குரிய காணி எனவும் அதனை ரஷ்யத் தூதரகம் எவ்வித அறிவித்தலுமின்றிச் சுவீகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

 'இந்தக் காணிக்காகத்தான் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி பொரளைச் சந்தியில் எனது தந்தை கொலை செய்யப்பட்டார். நாங்கள் உயர்மட்ட அதிகாரிகளிடம் சென்று நீதி கோரினோம். ஆனால் பலனில்லை. எம்மிடம் உறுதியுள்ளது. நீதிமன்றம் சென்ற போதிலும் அவர்கள் எம்முடன் பேசுவதற்கு வரவில்லை. மேர்வின் சில்வா, பாதாளக் குழுத் தலைவர் பிரின்ஸ் கோலம் மற்றும் கோத்தபாய ஆகியோர் இதன் பின்னணியில் உள்ளனர்' என்று குறிப்பிட்டார். 

 இதேவேளை, பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்காத நிலையில் மேற்படி குழுவினர் காணிக்குள் சென்றமையினால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ரஷ்யத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த காணியில் இலங்கைக்கான ரஷ்யத் தூதரக அலுவலகம் அமையப்பெற்று வருகின்றது. 

 இந்தக் காணியை 2846 என்ற இலக்க உறுதியின் மூலம் 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி இலங்கை அரசிடமிருந்து ரஷ்ய தூதரகம் பெற்றுக் கொண்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் இந்தக் காணி தொடர்பாக எவ்விதமான அழுத்தங்களும் ஏற்படவில்லை என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.