மூன்று பிரதான அம்சங்களில் அரசியல் அமைப்பில் மாற்றம்
அரசியல் அமைப்பு பிரதான மூன்று அம்சங்களில் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசமுள்ள சில அதிகாரங்கள் இரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிகாலத்தில் மாத்திரம் சில அதிகாரங்கள் அவருக்கு உள்ளவாறே வழங்கப்படும் என்றும் இதற்கு பல தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.